தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இளம் நடிகை : இறுதியாக சூர்யாவுடன் பேசியது அம்பலம்!!

422

இளம் நடிகை

இளம் நடிகை நாக ஜான்சி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் சூர்யா என்ற நபருடன் போனில் பேசியது தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற நடிகை நாக ஜான்சி கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் ஜான்சி எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என் எழுதியிருந்தார். இதோடு அவர் இறுதியாக பேசிய வீடியோவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் என்ன பேசினார் என்பதை அவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை.

இதனிடையில் ஜான்சியின் செல்போனை சோதனை செய்தபோது, இறப்பதற்கு முன்னர் சூர்யா என்ற நபருடன் போனில் பேசியதும், வாட்ஸ் அப்பில் 14 மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

சூர்யாவை கடந்த ஆறு மாதங்களாக ஜான்சி காதலித்த வந்த நிலையில் காதலுக்கு அவர் குடும்பத்தார் ஒத்துகொள்ளவில்லை. இதனால் ஜான்சி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.