14 வயதில் குழந்தைக்கு தாயான சிறுமி : பெற்றோரே திருமணம் செய்து வைத்தது அம்பலம்!!

294

14 வயதில் குழந்தைக்கு தாயான சிறுமி

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு, குழந்தை பிறந்துள்ள சம்பவம் மருத்துவமனை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை பூர்விகமாக கொண்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக திருப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு கூலி வேலை செய்து சிறுமியை படிக்க வைத்து வந்த பெற்றோர் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஊத்துக்குளியில் கணவனுடன் ஒன்றாக வசித்து வரும் சிறுமிக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.  அப்போது சிறுமியின் வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக சிறுவர் பாதுகாப்பு நலவாரியத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், 14 வயது சிறுமி எப்படி ஒரு குழந்தையை பார்த்துக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியதோடு, விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.