கணவர் இறந்துவிட்ட நிலையில் வேறு ஒரு ஆணுடன் காதல் : இறுதியில் விதவைக்கு நேர்ந்த சோகம்!!

284

விதவைக்கு நேர்ந்த சோகம்

மும்பை மான்கூர்டு ஜோதிலிங் நகரை சேர்ந்த விதவை பெண் ரோகிணி என்பவர் இறந்துபோன சம்பவத்தில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நவிமும்பை வாஷியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் ரோகிணிக்கு,

அதே மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த சுனில் சிர்கே(44) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் ரோகிணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுனில் சிர்கேவை வற்புறுத்தி வந்தார்.

ஆனால் சுனில் சிர்கே அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் தொல்லை தாங்கமுடியாத சுனில், தனக்கு இடையூறாக இருக்கும் ரோகிணியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதனால் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ரோகிணியை மம்பட்டியால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து பொலிசார் சுனில் சிர்கே, ராமச்சந்திரா ஜாதவ், விஜய்சிங் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.