ஊர் மக்கள் முன் தற்கொலை செய்து கொண்ட நபர் : கலங்க வைத்த நிகழ்வு!!

218

தற்கொலை செய்து கொண்ட நபர்

தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக உயர்மின் கோபுரத்தின் மீது ஏறிய ஒருவர் மனைவி பிள்ளைகள் கீழிருந்து கெஞ்சி கூத்தாடியும் மதிக்காமல் குதித்து தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில்ஆழ்த்தி உள்ளது.

தமிழகத்தில் திருவண்ணாமலைமாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது உறவினருடன் இணைந்து சென்னையில் சென்டரிங் வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும் கிரிஜா மற்றும் ஆரியா என்ற இரண்டுகுழந்தைகளும் உள்ளன.

இரு தினங்களுக்குமுன்பு விடுமுறை எடுத்து வந்தவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்அவர் குடுபத்தில் பிரச்சனை தொடர்ந்து நிலைவி வந்துள்ளது.

ஆத்திரம் அடைந்தரமேஷ் கிரமத்தில் உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக செல்போனில்தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவர் மனைவி மற்றும்குழந்தைகள் செல்போனில் கெஞ்சியும் கதறியும் அழுது கீழே இறங்க கேட்டு கொண்டனர்.

இந்நிலையில் அங்குவந்த தீயணைப்பு துறையினர் உயர் மின்கோபுரத்தில் பாதிவரை ஏறினர். அருகில் வந்தால் குதித்துவிடுவேன்என்று ரமேஷ் தொடர்ந்து மிரட்டியதால் ஒன்றரை மணிநேரம் மின்கோபுரத்தின் மேலே நின்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எனினும் அதை கண்டுகொள்ளாத ரமேஷ் கீழே குதித்து உடல் சிதறி சம்பவ இடத்தில் பலியானார். இதைநேரடியாக பார்த்த அவர் மனைவியும் பிள்ளைகளும் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் கலங்க செய்தது.