தாயில்லாத குழந்தைக்கு சூடு வைத்த தந்தை!!

165

குழந்தைக்கு சூடு வைத்த தந்தை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாயில்லாத 7 வயது குழந்தையின் தந்தையே நெருப்பால் சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவரே இவ்வாறு செய்துள்ளார். குறித்த நபரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் ஏற்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மணிகண்டனுக்கு 7 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். குறித்த நபரின் மனைவி உயிரிழந்த பின்னர் சமீப காலமாக வேறு பெண்களுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மணிகண்டனின் 7 வயது மகள் வாவறை பாடசாலையில் 2ஆம் வகுப்பில் கற்றுவருகிறார் இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக மகளுக்கு உடலில் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலைக்கு சென்ற மாணவியின் கன்னத்தில் தீக்காயம் இருந்ததை பார்த்த பாடசாலை ஆசிரியர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவலளித்தனர். தகவலறிந்து வந்த நாகர்கோவிலில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மணிகண்டனிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு மணிகண்டனை நாகர்கோவில் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொலிஸார் மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.