நடிகருக்கு 4வது மனைவியான நடிகை : திருமணமான சில நாட்களில் தற்கொலை முடிவு!!

455

நடிகை தற்கொலை முடிவு..

கேரளாவை சேர்ந்த நடிகர் ஆதித்யனுக்கும், நடிகை அம்பிளி தேவிக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆதித்யனுக்கு இது 4 வது திருமணம் என்று கூறப்படுகின்றது.

அதேபோல், அம்பிளி தேவிக்கும் இது 2 வது திருமணமாகும். இவர்களது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அம்பிளி தேவியின் முதல் கணவர், தனது மனைவிக்கு திருமணமானதை கேக் வெட்டி கொண்டாடியும் தொல்லை ஒழிந்தது எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், திருமணமான சில நாட்களிலேயே மனமுடைந்துபோன அம்பிளி தேவியும், ஆதித்யனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த தகவலை அவர்களே, பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள்.