தூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு செல்பி : பின்னர் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

233

தூக்கில் தொங்குவது போல் மாணவிக்கு செல்பி

தமிழகத்தில் ஒருதலை காதலில் மனமுடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கில் தொங்குவது போல் செல்பி எடுத்து மாணவிக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஹரிகரசுதன் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர். இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஹரிகரசுதன் தனது கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததுள்ளார். அந்த மாணவியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று மாணவரின் தந்தை சத்தியசீலன் கடலூர் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விரக்தியில் இருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். மட்டுமின்றி தமது முடிவை மாணவிக்கு தெரிவிக்கவும் எண்ணியுள்ளார். உடனே வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்கிட்டுள்ளார்.

பின்னர் மாணவர் தூக்கில் தொங்குவது போல செல்பி எடுத்துள்ளார். அதனை மாணவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரவு வீடு திரும்பிய அவரது தாயார் சாவித்திரி, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.