30 கிலோ உடல் எடையை குறைத்து சாம்பியன் ஆன நபர்!!

680

சீனாவில் நபர் ஒருவர் தனது பருமனான உடல் எடையை குறைத்ததோடு, Body building சாம்பியன் பட்டத்தையும் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.சீனாவின் ஹார்பின் பகுதியை சேர்ந்தவர் ஸாங் ஷுவாய்(22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் இவர் சிறந்த கூடைப்பந்து வீரராக திகழ்ந்து வந்தார்.

ஆனால், திடீரென மிக மோசமான காயம் ஏற்பட்டதால் இவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக மனஅழுத்தத்திற்கு ஆளான ஷுவாய், அதிகமாக சாப்பிட ஆரம்பித்தார்.இதனால் 40 கிலோ எடை கூடியதால் பல இன்னல்களுக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து, தனது உடல் எடையை குறைக்க முடிவெடுத்த ஷுவாய், மீண்டும் உடற்பயிற்சியை ஆரம்பித்தார்.

கடுமையான உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டதால், ஷுவாயின் உடல் எடை 30 கிலோ குறைந்தது. இதனால் தனது பழைய உடல்நிலையை பெற்ற இவருக்கு, Body Building மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.அதற்காக பயிற்சிகளை மேற்கொண்ட ஷுவாய், நம்பிக்கையுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விபத்து நிகழ்ந்தபோது நான் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் துவண்டு போனேன். கண்டதையும் சாப்பிட்டேன். உடல் எடை கூடியது. ஒரு கட்டத்தில் அதன் கஷ்டத்தை உணர ஆரம்பித்தேன்.நான் இனி அவ்வளவுதானா என்ற பயம் வந்தது. நல்லவேளை, என் உடல் பூரணமாகக் குணமடைந்தது. சட்டென்று மன உறுதியுடன் உடல் எடையைக் குறைத்ததோடு, Body Building-யிலும் சாம்பியன் ஆகிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.