3 அடி உயரம் கொண்ட குள்ளபெண்ணை திருமணம் செய்து கொண்ட அழகான இளைஞர்!!

984

குள்ளபெண்ணை திருமணம் செய்த அழகான இளைஞர்

இந்தியாவில் 3 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ள குள்ளப்பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வித்தியாசாகர் (25). பெற்றோரை இழந்த இவர் தனது சகோதரி அரவணைப்பில் வளர்ந்தார்.

பட்டப்படிப்பு முடிந்த பின்னர் மளிகை கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார் வித்தியாசாகர். இந்நிலையில் ரவாளி (22) என்ற 3 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ள குள்ளப்பெண்ணை வித்தியாசாகருக்கு மணமுடித்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு 5அடி 4 அங்குலத்தில் உள்ள அழகான இளைஞரான வித்தியாசாகரும் சம்மதித்தார். அதன்படி இருவருக்கும் நேற்று முன் தினம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.