அன்று குண்டாக இருக்கிறாய் என வெறுத்து ஒதுக்கிய கணவன் : இன்று தங்கம் வென்று சாதித்த தமிழ்பெண்!!

1216

சாதித்த தமிழ்பெண்

குண்டாக இருப்பதால் கணவனால் கைவிடப்பட்ட ரூபி அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் பாடிபில்டிங் போட்டியில் சாதித்து காட்டியுள்ளார் அவர்.

தனியார் உடற் பயிற்சி கூடத்தில், பயிற்சியாளராகவும், ஸும்பா நடன பயிற்சியாளராகவும் பணியாற்றி வரும் ரூபி பியூட்டி தனது வாழ்க்கை குறித்து பிபிசியிடம் அளித்துள்ள பேட்டியில்,

அப்பா இல்லமால் அம்மாவின் பராமரிப்பில் சென்னையில் வளர்ந்தேன். வாழ்க்கையில் அடுத்தது என்ன என்ற தேடலே எனது முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. 2011 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு எனது மகன் படித்த பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சென்றேன்.

எனது மகனுக்கு இரண்டரை வயது இருக்கையில் மணவாழ்க்கை கசந்தது. ஆடை முதற்கொண்டு அலங்காரம் வரை எனது கணவர் எனக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்தார்.

அவருக்கு எது பிடிக்குமோ அதன்படி வாழ்வதற்கு என்னை வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். காரணம் கேட்டதற்கு நீ குண்டாக இருக்கிறாய், எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதை கேட்டு எனது இதயம் சுக்குநூறாக உடைந்தது.

அதன்பிறகு, எனக்குள் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு, எனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கு மாதங்களில் 78 கிலோ எடையிலிருந்து 52 கிலோவுக்கு குறைத்தேன், துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தேன்.

தினசரி உணவில் அரிசியை தவிர்த்து காய்கறியை அதிகம் சேர்த்ததால் தன்னால் 26 கிலோ எடையை குறைக்க முடிந்ததாக கூறுகிறார். அவர் என்னை கேலி செய்துவிட்டார் என்பதற்காக தான் நான் நடைபயிற்சி செய்து எடையை குறைத்தேன். ஆனால், எடை குறைந்தவுடன் என்னை அரவணைப்பதற்கு பதிலாக அவரது சந்தேக பார்வையை வீச ஆரம்பித்தார். நானும், அவரும் ஒரு ஜிம்மில் சேர்ந்தோம்.”

“அங்குதான் பிரச்சனை வெடித்தது. எனக்கு தம்பி வயது இருக்கும் ஒரு ஜிம் பயிற்சியாளருடன் என்னை ஒப்பிட்டு பேசினார். அதுதான் என்னுடைய மண வாழ்க்கையின் இறுதி அத்தியாயமாக அமைந்தது.

நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஆலோசனை மூலம் பாடி பில்டங்கை முழு நேரமாக எடுத்ததாக கூறும் ரூபி, தொடக்கத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பெரும் அவமானங்களை சந்தித்ததாகவும் கூறுகிறார்.

ஆண்கள் தங்கள் உடம்பை பாடி பில்டிங்கிற்கு தயார் செய்ய அவர்கள் உட்கொள்ளும் உணவைவிட மூன்று மடங்கு அதிகமான உணவை பெண்கள் உட்கொள்ள வேண்டும். போட்டிக்கு தயாராவதற்கு முன்பு, நான் தினமும் மூன்று கிலோ இறைச்சி உண்பேன்.

பாடி பில்டிங் அல்லது உடற்பயிற்சிக்கு செய்ய வரும் பெண்கள் முதலில் தங்கள் உடலை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இதில் வெற்றிப்பெற முடியும். கடந்தாண்டு, அசாமில் நடைபெற்ற தேசியளவிலான பாடி பில்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் ரூபி.