இரவு தூங்கும் முன் ஒரு அப்பிள் சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

944

அப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள். இதில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் நல்ல கனவைப் பெற உதவும் கனிமச்சத்துக்கள், அன்டி-ஓக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன.ஆகவே இரவில் உங்களுக்கு திடீரென்று பசி எடுத்தால், அப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

அப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். அப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.அப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக அப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும்.

அப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.அப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்.

அப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றஇறக்கம் ஏற்படுவது குறையும்.அப்பிளை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூச்சுக்குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, சுவாச பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.