அவுஸ்திரேலிய அழகி போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்!!

811

தமிழ்ப் பெண்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற MRS கேலக்சி என்ற அழகி போட்டியில் தமிழக பெண் பெனிட்டா சக்தி தெரிவாகியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் MRS கேலக்சி ஆஸ்திரேலியா அழகி போட்டிகள் நடக்கும். அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு இறுதி போட்டியில் பங்கேற்பார்கள்.

அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் இருந்து தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கிறார் பெனிட்டா சக்தி. தமிழகத்தின் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பெனிட்டா, கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அங்கிருக்கும் தனியார் வங்கியில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

அழகிப்போட்டியில் தேசிய அளவில் தெரிவாகியிருப்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போட்டிக்காக முழு ஈடுபாட்டுடன் தன்னை தயார்படுத்தி வருகிறார் பெனிட்டா.

என் கணவர் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் இந்த அளவுக்கு சாதிக்க முடிகிறது, பல தடைகளை கடந்து பெண்கள் சாதிக்க வேண்டும், அப்படி சாதித்தால் நிச்சயம் உலகம் உங்களை திரும்பி பார்க்கும் என கூறுகிறார் பெனிட்டா. வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் MRS கேலக்சி அவுஸ்திரேலியா 2019 நடைபெற உள்ளது.