மாற்று ஆடை கூட இல்லை : கல்நெஞ்சையும் கரைய வைக்கும் ஒரு தாயின் பாசப்போராட்டம்!!

1042

ஒரு தாயின் பாசப்போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 பிள்ளைகளை பெற்றெடுத்து கணவர் இல்லாமல் தனி ஆளாக பிள்ளைகளை வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த ஒரு தாய் இன்று கவனிக்க யாருமின்றி மாற்றுவதற்கு ஒரு ஆடை கூட இல்லாமல் இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

80 வயதான கோலம்மாளுக்கு மொத்தம் 11 பிள்ளைகள். இதில் 4 பிள்ளைகள் இறந்துவிட்டதையடுத்து 7 பிள்ளைகளையும் வளர்த்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் கோலம்மாளின் கணவர் இறந்துவிட்ட, தனது 7 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து அவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழியை இந்த 7 பிள்ளைகளும் நிரூபித்துவிட்டனர். பிள்ளைகள் அனைவரும் கைவிட்ட நிலையில் தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். நோய்வாய்ப்பட்டு கிடந்த அவரை மீட்டு அருகில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், மகன் ஒருவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தனது தாயை வீட்டுக்கு அழைத்து சென்ற மகன், சில நாட்கள் வைத்திருந்துவிட்டு தனது தாயிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை வாங்கிகொண்டு மீண்டும் தனியாக விட்டுள்ளார்.

படுத்த படுக்கையில், மாற்றுவதற்கு வேறு ஆடை கூட இல்லாமல் அனாதையாக இவர் தனது வீட்டில் படுத்திருக்கிறார். கோலம்மாளின் இந்த நிலை, அருகில் இருப்பவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தினாலும், பெற்ற பிள்ளைகள் கண்டுகொள்ளவில்லை.