சிங்கம் சூர்யாவை மிஞ்சிய நிஜ சூர்யா : திருடனை மடக்கி பிடித்த ஹீரோவின் வருத்தம்!!

590

சென்னையில் திருடனை மடக்கி பிடித்த சூர்யாவை பாராட்டிய காவல் ஆணையர் விஸ்வநாதன் வெகுமதிகளை வழங்கினார்.சென்னை அண்ணாநகரை சேர்ந்த மருத்துவர் அமுதா, நேற்றிரவு கிளினிக்கை மூடும் நேரத்தில் அங்கு வந்த இளைஞர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் ஆட்கள் யாரும் இல்லாததை கவனித்துக் கொண்டு அமுதாவை மிரட்டி 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.திருடன் திருடன் என அமுதா கத்த, எதிரே இருந்த கடையிலிருந்து சிறுவன் ஓடி வந்து உதவத் தொடங்கினார்.

அதற்குள் திருடன் சுவர் ஏறி குதிக்க, திருடனை உடனே பிடியுங்கள் என கத்திக் கொண்டே சூர்யா துரத்தியுள்ளார்.சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் ஓடிச்சென்று திருடனை மடக்கிபிடித்து நகைகளை மீட்டார்.சூர்யாவின் துணிச்சலை பலரும் பாராட்டிய நிலையில், காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று வெகுமதியை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா,”திருடனை துரத்தி செல்லும் போது பொதுமக்களை உதவிக்கு அழைத்தேன், யாரும் எனக்கு உதவவில்லை. பின்னர் சட்டை காலரை பிடித்து இழுத்து காலை தட்டிவிட்டு முகத்தில் குத்துவிட்டதும் நிலை தடுமாறிவிட்டார்.பின்னர் மடக்கி பிடித்து தண்ணீர் வாங்கி கொடுத்தேன்.பொலிசார் வந்ததும் அவரை ஒப்படைத்தேன்” என தெரிவித்துள்ளார்.மேலும் பொலிசார் வந்த போது போட்டோ எடுத்தார்களே தவிர யாரும் உதவி செய்யவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.