மார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

1680

மார்ச் மாத ராசி பலன்கள்

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டிவரும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.

அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் உபாதைகள் நீங்கும். பெற்றோர்களுடன் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

புது மன தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய போகிறீர்கள். புதிய முயற்சிகளை சில நாள் தள்ளி போடுவது நல்லது. மனதில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் செய்ய தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பணம் எவ்வளவு சம்பாரித்தலும் அது போதாமல் வெளியில் கைமாற்ற பணம் வாங்க வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவி கிடைக்க பெறுவீர்கள்.

திருமணம் தொடர்பான பேச்சுக்கள் சுமூகமாக நடைபெற்று முடியும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய வாகன வசதி பெற்று மகிழும் வாய்ப்புண்டு. புதிய வீடு பேறு அமையவும் வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைத்து அதன் மூலம் பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும்.

குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு கூடும். அலைச்சல்கள் குறையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. உங்கள் முக்கிய காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்பார்க்கும் பல நல்ல காரியங்கள் நடக்க போகிறது. உங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். போதிய வருமானம் தங்கு தடையின்றி இன்றி கிடைக்கும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். ஆன்மீக பணிகளுக்காக பணம் செலவழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். உடன்பிறப்பு வகையில் சில அனுகூலமான பலன் உண்டு.

நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கும். பெறுவீர்கள்.எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகுவீர்கள். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழலில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். .

சந்திராஷ்டமம் : 2,3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எதற்காகவும் பயமோ, கவலைப்பட தேவையில்லை, காரணம் நீங்கள் திர்பார்த்த காரியமும், எதிர்பார்க்காத காரியமும் நிறைவேறும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணம் கூட இப்போது கைக்கு வந்து சேரும். சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும்.

நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்ப நபர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரிடும். பழைய கடனை அடைக்க வழி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய சொந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. சிறிய அளவில் புதிய தொழில் ஒன்றை தொடங்க முடியும்.

சந்திராஷ்டமம் : 5,6,7 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து போகவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர், நண்பர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு.

புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்க துவங்கும். பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். பணம் பலவகையில் வந்து சேரும்.

குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பழைய வீட்டில் இருப்பவர்களுக்கு புது வீடு கட்டி குடியேறும் யோகம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பல புதுமையான விஷயங்கள் நடக்கும்.

சந்திராஷ்டமம் : 7,8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கையில் எடுத்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உங்கள் மனதிற்கு சரி என பட்டதை துணிச்சலாக செய்வீர்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும்.

புது வீடு கட்டும் பணி தொடரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தன வரவு உண்டாகும். ஆடம்பர வசதிகள், சொந்த வீடு போன்ற பல நன்மைகள் அமையக்கூடும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்.

திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும்.வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் பாராட்டு மழை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, இது நாள் வரை இருந்து வந்த மனக்கவலைகள் அடியோடு மறையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். உங்கள் வங்கி கணக்கில் பணம் உயரும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்களிடம் பண விஷயத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது, ஆகையால் கவனமாக இருக்கவும்.

முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். புது வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் விருப்பங்களை எதுவாகினும் அது நிறைவேற்ற வழி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ, செய்யவோ வேண்டாம்.

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எல்லா விஷயத்திலும் பொறுமையை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மனதில் ஒரு விதமான குழப்பங்கள் நிலவினாலும் அது நாளடைவில் சரியாகிவிடும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர்.

பயணங்கள் தொடர்பாக அலைச்சல் செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகமும் ஆதரவும் கிட்டும். பெண்கள் வகையில் நிறைய நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்கலாம்.

சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடல் மேன்மை பெரும். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பணப்புழக்கம் வெளியில் சொல்லும்படி இருக்கும்.

உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலக போகிறது. புதிய பாதையில் பயணிக்க முடியும். ள் மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியத்தை கூட தெரியமா எடுத்து செய்வீர்கள். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும்.

கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். எந்த ஒரு விஷத்தை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது யுத்தமும். குடும்ப தேவைகளை பூர்த்தியாகும். கையில் ஓரளவு பணம் கிடைத்தவுடன் பழைய கடனை அடைக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரம் முன்பை விட இப்போது சிறப்பாகவே இருக்கும்.

சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்கள் எதிர்காலம் திட்டங்கள் சிறப்பான முறையில் நிறைவேறும். பணம் கையில் புரள ஆரம்பிக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். சுப நிகழ்ச்சிகள் எல்லாம் திட்டமிட்டபடி நடைபெறும். வீட்டில் சுப செலவுகள் அதிகம் இருக்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உங்கள் வித்யாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்வீர்கள். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அடைக்கவும் வழி கிடைக்கும்.

மன திருப்தியுடன் செய்யும் காரியும் வெற்றி பெரும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொழில், வியாபார முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, பல சிறப்பான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் நிறைய வரும். நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும்.

முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியூர் சென்று தங்க நேரிடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனக்குழப்பம் ஏதும் வராமல் இருக்க தினமும் தியானம் செய்யவும்.

நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீட்டில் உறவினர் வருகை அதிகரிக்கும். குடும்ப நபர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தவும். தொழில் வகையில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

சந்திராஷ்டமம் : 20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த விரைவில் நிறைவேறும். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர யோசிக்கவும். பண சேமிப்பில் கவனம் செலுத்தினால் பல வகையில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு.

புது வீடு, மனை வாங்கு வேண்டும் என்ற யோசனை வரும். கணவன் மனைவிக்குள் சண்டை நீங்கி சமரசம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். காதல் விவகாரங்களில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு.

பணம் கொடுக்கல் வாங்கலில் சிரமங்கள் ஏற்படும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு முற்றிலும் நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. உத்யோகத்தில் பணிகளை விரைவாக செய்து முடிக்கவும். தொழில், வியபாத்தில் போட்டிகள் குறையும்.

சந்திராஷ்டமம் : 22,23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.