18 வருட சந்தோஷ வாழ்க்கை : போரில் தொலைந்த கணவன் : 48 ஆண்டுகளாக கணவருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் மனைவி!!

641

கணவருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் மனைவி

1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரின் போது தனது கணவரை இழந்த தமயந்தி கடந்த 48 ஆண்டுகளாக கண்ணீர் மல்க அவருக்காக காத்திருக்கிறார்.

உத்தர பிரதேசம் அலகாபாத்தில் பிறந்தவர் தமயந்தி சுபேதார். பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர், 3 முறை பேட்மிட்டண் போட்டியின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970 ஆம் ஆண்டு இந்திய விமான படை வீரர் லெப்டினென்ட் விஜய் வசந்த் தாம்பேவை கரம்பிடித்தார் தமயந்தி. திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்றது. இந்நிலையில் தான் இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கியபோது டிசம்பர் 5 ஆம் திகதி பாகிஸ்தான் எல்லையில் வைத்து விஜய் வசந்த் கைது செய்யப்பட்டது ரேடியாவில் அறிவிக்கப்பட்டதை கேட்டு தமயந்தி அதிர்ச்சியடைந்தார்.

அன்று காணாமல் போன கணவரை 48 ஆண்டுகள் ஆகியும் வீடுதிரும்பவில்லை. தமயந்தியும், பல பிரதமர்கள், தூதர்கள் மற்றும் பல்வேறு மனித உாிமை அமைப்புகளை சந்தித்து வீரர்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கோாிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

தமயந்தி கண்ணீர் மல்க கூறியதாவது, பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று எனது கணவரை பலமுறை தேடினேன், ஆனால் சிறை காவலர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது தவிர, எனது கணவர் கிடைக்கவில்லை.

கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. என்னால் முடிந்த பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டேன், இதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை என கூறியுள்ளார்.