எதிர்பாராத விதமாக நடிகர் விஷாலுக்கு நேர்ந்த விபத்து!!

107

விஷாலுக்கு நேர்ந்த விபத்து

விஷால் தற்போது படம், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அண்மையில் பெரும் முயற்சி எடுத்து இளையராஜா விழாவை நடத்தி காட்டிவிட்டார்.

தற்போது அவர் அயோக்யா படத்தில் ராஷி கண்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் வந்த டெம்பர் என்ற படத்தின் ரீமேக் தான் இது. வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பிளாக்பஸ்டர் பாடல் ஒன்றை ரீமேக் செய்து படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக விஷாலுக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விஷால் சொல்லும் போது இது எதிர்பாராத விபத்து, படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது கீழே விழுந்துவிட்டேன் என கூறியுள்ளார்.