மகனின் திருமணத்திற்கு 100 மில்லியன் டொலர் செலவு செய்த அம்பானி!!

146

ஆகாஷ் அம்பானி

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவின் திருமணத்திற்கு 700 கோடி செலவு செய்து உலக கவனம் ஈர்த்தவர் தற்போது தனது மகன் ஆகாஷின் திருமணத்திற்கு 100 மில்லியன் டொலர் செலவு செய்துள்ளார்.

ஆகாஷ் அம்பானியின் ஒரு திருமண பத்திரிகை மட்டும் 1.5 லட்சம் என கூறப்பட்டது. மேலும், சுவிட்சர்லாந்தில் ஆகாஷ் தனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடினார். சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியில் சுமார், 600 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இங்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

ஆகாஷின் திருமணம் ஜியோ உலக சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் ஐநா செயலர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேர்- செரி ப்ளேர் தம்பதியர், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை- அஞ்சலி பிச்சை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

மேலும், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆகாஷின் திருமணத்திற்கு மட்டும் முகேஷ் அம்பானி சுமார் 100 மில்லியன் டொலர் செலவு செய்துள்ளார். மகள் இஷாவின் திருமணம் ஆண்டலியா இல்லத்தில் நடைபெற்றபோது உலகிலேயே அதிக விலைமதிப்பில் நடத்தப்பட்டது திருமணம் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.