ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை கட்டிப்பிடித்து கதறி அழுத காதலி!!

252

கதறி அழுத காதலி

மெக்சிகோவில் ரத்தம் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை, அவருடைய காதலி கட்டிப்பிடித்து இறந்துவிடாதே என கெஞ்சியபடியே கதறி அழும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மெக்சிகோவில் ஹோட்டல் ஒன்றிற்கு வெளியே சோனியா (22) என்கிற பெண்ணுக்கும், அவனுடைய 29 வயது காதலன் எரிக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வயிற்றில் ரத்தத்துடன் எரிக் தரையில் சரிந்து விழுந்தார். அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே, இறந்துவிடாதே என சோனியா கெஞ்சுகிறார்.

அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர், என்ன நடந்தது என கேட்கும்பொழுது, “அவன் என்னை அடித்தான், என்னை கொலை செய்ய முயற்சித்தான்,” என கூறினார். உடனே எரிக் திரும்பி, “உண்மையை சொல்லு, அவள் என்னை என்னை கொலை செய்ய விரும்புகிறாள்” என கூறினார்.

அழுதுகொண்டிருந்த அந்த பெண், நான் உன்னை கொலை செய்ய முயற்சிக்கவில்லை. ஏனென்றால் நான் உன்னை காதலிக்கிறேன். நான் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன். ஆனால் நீ எனக்கு என்ன செய்தாய் என்பதை மறந்துவிட்டாய் என கூறினார்.

உடனே காயங்களுடன் கிடந்த எரிக், “கடவுள் தான் இதற்கு சாட்சி” என கூறிக்கொண்டிருந்தார். அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எரிக் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சோனியாவை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.