ஆசை வார்த்தை காட்டி என்னையும் : பொள்ளாச்சி விவகாரத்தில் மேலும் ஒரு இளம்பெண் புகார்!!

250

மேலும் ஒரு இளம்பெண் புகார்

பொள்ளாச்சி விவகாரத்தில் மேலும் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் புகார் கொடுத்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவிலை என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவர்களை படமாக பிடித்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி அத்துமீறியிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் புகார் கொடுக்க வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என கோவை எஸ்.பி மற்றும் பொள்ளாச்சி காவல்துறை தெரிவித்திருந்தது.

அந்த வரிசையில் தற்போது ஒரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகாரின் பேரில் இதுவரை வழக்கு பதிவு செய்து பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பொலிஸார் மீதான நம்பிக்கையும் குறைந்துள்ளது.

அந்த வீடியோவில், தன்னையும் காதலிப்பதை போல ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று பலவந்தப்படுத்தி, ஆபாச புகைப்படங்கள் எடுத்ததாகவும், அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.