உங்கள் அம்மாவின் உடல் வழியாக தானே வந்தீர்கள் : சர்ச்சையை ஏற்படுத்திய சமீரா ரெட்டி!!

208

சமீரா ரெட்டி

வாரணம் ஆயிரம், சேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2014ல் ஆகாஷ் வர்தே என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

இவர்களுக்கு ஏற்கனவே ஹன்ஸ் வர்தே என்ற மகன் இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக சமீரா கர்ப்பமாகியுள்ளார். இதனை சில நாட்களுக்கு முன் தனது தற்போதைய புகைப்படத்துடன் தெரிவித்திருக்கும் அவர் அப்போட்டோவிற்கு வந்த ஆபாசமான கமெண்ட்களை பற்றி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

அதில், உடல் அமைப்பைக் கொண்டு கிண்டல் செய்பவர்களைப் பார்த்து கேட்க விரும்புகிறேன்.. நீங்கள் உங்கள் அம்மாவின் உடல் வழியாகத் தானே வந்தீர்கள், உங்களைப் பெற்றபின் உங்களது அம்மாவின் கவர்ச்சி குறைந்துவிட்டதா என்று அவரிடமே கேளுங்கள்.

உடலமைப்பைப் பற்றி விமர்சிப்பது தவறானது, அவமதிப்பானது. என் உடலமைப்பு குறித்தும் கருவுற்றது குறித்தும் நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.