சொத்துக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை!!

128

நடிகை ஜெயமாலினி

தமிழ் சினிமாவில் பெயரும், புகழும் கொண்ட கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயமாலினி. ஒரு காலத்தின் இவரின் குத்தாட்ட பாடல் இல்லா படம் இல்லை என சொல்லும் படி இருந்தது. 1970 -1980 களில் முன்னணி நடிகையாக வலம வந்தவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என படங்களில் நடித்து வந்தார்.

அண்மையில் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் என் அப்பா சினிமாவில் படத்தயாரிப்பாளர். படம் எடுத்து சொத்துக்களை கரைத்து விட்டார். வீட்டை விற்கும் சூழ்நிலை வந்தது.

அதனால் நானும் என் அக்கா ஜோதி லட்சுமியுன் நடிக்க வந்தோம். நான் படங்களில் ஆபாசம் இல்லாமல் கவர்ச்சியை வெளிப்படுத்தினேன். படத்திற்காக படுக்கைக்கு அழைப்பது இல்லை.

ஹீரோ, வில்லன் என யாரும் நடிகைகளை தொடமாட்டார்கள். மரியாதையாக நடத்துவார்கள். குறைவாகவும் என்னை யாரும் மதிப்பிடவில்லை. நாங்கள் அன்று கவர்ச்சி நடனம் ஆடும் போது அணிந்த உடைகளை இப்போது வெளியில் பெண்கள் சாதாரணமாக அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது என கூறியுள்ளார்.