பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : சம்பவம் நடந்த பண்ணை வீட்டில் கைப்பற்ற பொருட்கள் என்ன தெரியுமா?

320

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் நேற்று ஆய்வு நடத்திய நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

7 ஆண்டுகளாக 200 கல்லூரி மாணவிகள், பெண்களை பேஸ்புக் மூலம் ஏமாற்றி பலாத்காரம் செய்த கும்பலின் செயல் தான் தமிழகத்தின் தலைப்பு செய்தியாக தற்போது மாறியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் தான் நடந்துள்ளது.

இதையடுத்து மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சிபிசிஐடி எஸ்.பி. நிஷா தலைமையிலான பொலிஸ் படை இந்த சோதனையை நடத்தியது.

இந்த சோதனையில் 10 செல்போன், 7 சிம்கார்டுகள், மெமரி கார்டு, பென் ட்ரைவ் உள்ளிட்ட பல ஆவணங்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையை வீடியோ பதிவு செய்த பொலிசார் திருநாவுக்கரசுவின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொண்டனர். சிபிசிஐடி பொலிசாரின் விசாரணை 4 மணி நேரம் நீடித்ததாக தெரியவந்துள்ளது.