அற்புத பலன்கள் தரும் அரிசி கஞ்சி!!

1018

நம்மில் பலர், சாதம் வடித்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து கொட்டி வருகிறோம். ஆனால், அதில் நிறைந்துள்ள பலன்கள் ஏராளம்.ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில், சிறிது மோர் கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும், உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும்.அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி பெருகும்.

அரிசி கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களின் உடல் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.பசியை தூண்டுவதற்கு பழச்சாறுகள் அருந்துவதற்கு பதிலாக, அரிசி கஞ்சியை பருகலாம். ஏனெனில் இதுவும் பசியை தூண்டுவதோடு, செரிமானத்திற்கும் வழிவகுக்கும். இதனுடன் சீரகம் சேர்த்து பருகுவது மிக நன்று.இட்லிக்கு மாவு அரைக்கும்போது, அரிசி கஞ்சியையும் கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

மருத்துவ பயன்கள் மற்றும் இதர பயன்கள்:அரிசி கஞ்சியுடன் திராட்சை பழங்களை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர, முகம் பளிச்சென்று மிளிரும்.சொறி, சிரங்கு உள்ள இடங்களில் ஒரு பருத்தி துணியை கஞ்சியில் நனைத்து கட்டி வர, ரணம் ஆறிவிடும். தீக்காயம் ஏற்பட்டாலும் அரிசி கஞ்சியைப் பயன்படுத்தலாம்.

வெளியில் செல்லும் முன்னர், அரிசி கஞ்சியை கொஞ்சம் உடலில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து கழுவி விட்டு பிறகு வெளியில் செல்லலாம்.அவ்வாறு செய்தால் புற ஊதா கதிர்களின் தாக்குதலில் இருந்து நம் உடல் பாதுகாக்கப்படும்.தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க அரிசி கஞ்சி உதவும். நமது உடலில் நெற்றி, கழுத்து, கை, முகம் போன்ற இடங்களில் தேய்த்து வருவதன் மூலம் வயதான தோற்றத்தை தவிர்க்கலாம்.

வேர்க்குரு பிரச்சனைகளுக்கும் அரிசி கஞ்சியின் மூலம் தீர்வு கிடைக்கும்.
கால்வலியால் அவதிப்படுபவர்கள், அரிசி கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைக்க வேண்டும். அதன் பின்னர் கால் வலி குறையும்.அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும், தலையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவும்.