வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்த பேராசிரியர் : ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்!!

655

கத்தியால் குத்திய மாணவன்

பாகிஸ்தானில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த மாணவன், பேராசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். பாகிஸ்தானில் பஹவால்பூரில் உள்ள சாதிக் எக்டர்டன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் காலித் ஹமீட். இவர் இன்னும் 4 மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு மாணவிகளையும் அழைத்து வந்ததால், இது இஸ்லாம் சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி, Khateeb என்கிற மாணவன் காலித்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

திடீரென ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தி ஒன்றினை கொண்டு தலை மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள் வேகமாக காலித்தை மீட்டு பஹாவல் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட Khateeb-ஐ கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனுக்கு எந்த பயங்கரவாத அமைப்பிலும் தொடர்பு இல்லை. ஆனால் ஏதேனும் வழக்குகளில் சிக்கியுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.