“சூப்பர் மேன்” போஸ் கொடுத்தபடியே பிறந்த பிஞ்சுக்குழந்தை : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

423

வைரலாகும் புகைப்படம்

பிரித்தானியாவில் பிஞ்சுக்குழந்தை ஒன்று பிறந்ததும் “சூப்பர் மேன்” போல போஸ் கொடுத்தபடியே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த ப்ரீ ஜெசிக்கா என்கிற தாய்க்கு, அறுவை சிகிச்சை மூலம் ஹாரி மற்றும் ஜாக் என்கிற இரண்டு குழந்தைகள் பிறந்தன. இதில் இரண்டாவது குழந்தையான ஹரி, 40 வாரம் 4 நாட்களில் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்தான்.

அந்த அனுபவம் மிகவும் அமைதியாக இருந்தது என குறிப்பிட்டு, ஜெசிக்கா தன்னுடைய மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

ஆனால் அவருக்கு அப்பொழுது தெரியாது, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவும் என்று. அந்த புகைப்படத்தில் குழந்தை ஹரி ”சூப்பர் மேன்” போல போஸ் கொடுத்துள்ளது.

ஹரிக்கு தற்போது 7 வயதாகிறது. ஆனால் குழந்தை பிறந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வேறு ஏதேனும் இருக்கிறதா என மக்கள் இன்னும் அவரிடம் கேட்பதாக தெரிவித்துள்ளார்.