ஏழை காதலனை கழட்டிவிட 37 வயது காதலி போட்ட மாஸ்டர் பிளான்!!

422

காதலி போட்ட மாஸ்டர் பிளான்

சீனாவில் தன்னுடைய காதலன் ஏழை என தெரிந்த பின்பு அவரை கழட்டி விடுவதற்கு காதலி வித்தியாசமான முறையில் யோசித்து கடையிசியில் பொலிசாரிடம் சிக்கிக் கொண்டார்.

சீனாவை சேர்ந்தவர் யூ. 37 வயதான இவரும் லின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இந்த ஜோடி அவ்வப்போது வெளியில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சீன புத்தாண்டு அன்று யூ தனது காதலன் லின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு லினின் வீட்டை பார்த்த அவருக்கு, அப்போது அவர் அதிக பணம் சம்பாதிக்கும் வேலையில் இல்லை, அதிக வசதியில்லாவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் லினிடம் காதலை தொடர விரும்பாத அவர் பல முறை ஜாடை மாடையாக லின்னிடம் தெரிவித்தபோது அவர் யூவை விட்டு பிரிய விரும்பவில்லை. அதனால் அவரை பிரிய லின் புதிய திட்டம் திட்டியுள்ளார்.

அதன் படி, தனது ஹாஸ்டலுக்கு வந்த யூ தனது காதலன் லின்னிற்கு போன் செய்து தன்னை தனது முன்னாள் கணவர் கடத்தி விட்டார். எப்படியாவது என்னை காப்பாற்று, நான் இப்பொழுது ஹைவேயில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் தன் செல்போனில் இருந்தே தனது முன்னாள் கணவன் போல் லின்னிற்கு மெசேஜ் செய்துள்ளார். மேலும் இது குறித்து நீ பொலிசாரிடம் செல்லக் கூடாது, அப்படி சென்றால் யூவையும், உன்னையும் கொன்று விடுவேன் என மிரட்டல் எஸ்எம்எஸ்களையும் அனுப்பியுள்ளார்.

இதன் பின் சில நாட்கள் லின் செய்வது அறியாமலும், யூவை கண்டுபிடிக்க முடியாமலும் திணறி வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என ஒரு நாள் யூ நம்பரில் இருந்து நான் யூவை கொன்று அவரது உடலை ஏரியில் வீசி விட்டேன் என எஸ்எம்எஸ் வந்துள்ளது.

இதையடுத்து பதறி போன லின், அதை கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின் பொலிசார் யூவின் செல்போன் டவர் சிக்னல் இருக்கும் இடத்தை வைத்து சோதித்ததில் அது அவர் வசிக்கும் ஹாஸ்டலையே காட்டியுள்ளது.

இதனால் பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, அவர் எந்த வித பயமின்றி, ஹாயாக டிவி பார்த்துக் கொண்டுள்ளார். பொலிசார் அவரை பிடித்து விசாரித்த போது, லின்னை கழட்டி விடவே நான் இப்படி ஒரு நாடகம் ஆடியதாக கூறியுள்ளார்.