பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய கும்பல் : 3 ஆண்டுகளாக நடந்த அட்டூழியம் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

1065

ஆபாசபடம் எடுத்து மிரட்டிய கும்பல்

தமிழகத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரப்புவோம் என கூறி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதே போன்ற சம்பவம் சேலத்திலும் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பவித்ரா (25).

இவர் சேலத்தை சேர்ந்த தனது உறவினர் மோகன சுந்தரம் (25) என்பவருடன் கடந்த 22ம் திகதி இரவு 12:00 மணிக்கு பவானிக்கு பைக்கில் சென்றனர். வழியில் அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து பவித்ராவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது. அவரது புகாரின்படி பொலிசார் 11 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த காதலர்கள் இரவு நேரங்களில் பட்டர்பிளை மேம்பாலம் அருகே வரும் போது அவர்களை சிலர் வழிமறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பின்னர் ஆண்களை துரத்தி விட்டு அவர்களின் காதலிகளை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்து ஆபாச படம் எடுத்தது தெரியவந்தது. அந்த வீடியோவை வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் பரப்புவோம் எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வசதியான பெண்களிடம் நகை பணத்தை கறந்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் (31) என்பவரை பவித்ராவிடம் நகை பறித்த வழக்கில் பொலிசார் நேற்று கைது செய்தனர்.

அவனது கூட்டாளிகள் மூவரை வேறொரு வழக்கில் கைது செய்து கணக்கு காட்டி உள்ளனர். இந்த கும்பல் மூன்று ஆண்டுகளாக பல பெண்களை மிரட்டி அவர்களுடன் ஜாலியாக இருந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் காரணமாக பொலிசார் செயின் பறிப்பு வழக்கில் மூன்று பேரை மட்டுமே கைது செய்து பலாத்காரம் மிரட்டி பணம் பறித்த சம்பவங்களை மூடி மறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பவித்ராவின் மூலமே இச்சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் தனது உறவினர் மோகனசுந்தரத்தை காதலித்து வந்த நிலையில் இருவரும் பவானிக்கு பைக்கில் சென்ற போது பட்டர்பிளை பாலத்தின் அருகே நிறுத்தி பேசியபடி இருந்துள்ளனர். இதை பார்த்த கும்பல் காதலர்களிடம் வந்து மிரட்டல் விடுத்த நிலையில், பவித்ராவை மிரட்டிய மணிகண்டன் முத்தம் கொடு என கேட்டுள்ளான்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அது மட்டுமின்றி என்னுடன் ஜாலியாக இருந்தால் விட்டு விடுகிறேன் எனவும் கூறிய நிலையில் அதற்கு சம்மதிக்காத அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள தான் அணிந்திருந்த 5 சவரன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். இது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, இச்சம்பவத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.