அக்காவிற்காக உணர்ச்சிகளை அடக்கிகிட்டேன் : அதன் பின் எப்படி திருநங்கை? தையல் நாயகி அனுபவித்த கஷ்டங்கள்!!

1830

தையல் நாயகி அனுபவித்த கஷ்டங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தான் வாழ்வில் பெண்மையை உணர்ந்த தருணம், அதன் பின் திருநங்கையாக மாறியது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தையல் நாயகி, இவர் இப்போது தனியாக டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், என் கை மணத்துக்காகவே பலரும் விருப்பப்பட்டு நான் சமைக்கிற சாப்பாட்டை வாங்கிட்டு போகிறார்கள் என்று கூறிய அவர், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன்.

பள்ளியில் படிக்கும் போது கூட பெண்கள் கூடவே தான் இருப்பேன், இதன் காரணமாகவே என்னை பலரும் கிண்டல் செய்வார்கள், வீட்டில் என்னை அடித்திருக்கிறார்கள். இருப்பினும் எனக்குள் இருக்கும் பெண்மை தன்மையை மறக்க முடியாததால், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

அதன் பின் டீ கடை ஒன்றில் வேலை பார்த்து கொண்டே இருந்தேன். அப்போது அந்த கடைக்கு வந்த பெண் பார்க்க ஆண் மாதிரி இருந்தாலும், பெண் போன்ற உடை அணிந்திருந்தார்.

இதனால் நான் அவரை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து என்னை அழைத்து அறிவுரை வழங்கினர். இது எல்லாம் மிகவும் கடினம் என்று கூறினார். இதில் பல கஷ்டங்கள் இருக்கு என்று கூறினார்.

இருப்பினும் என்னால் முடியவில்லை என்று கூறினேன். அவர் திருநங்கை என்றால் கெளரவமாக வாழவேண்டும் என்று கூறியதால், அப்போதிலிருந்தே கடை ஏறுதல், பாலியல் தொழில் போன்றவைகளை விட்டேன்.

அதைத் தொடர்ந்து கடை ஒன்றில் சமையல் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் என்னை பார்த்துவிட்டதால், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின் வந்த குடும்பத்தினர், உன்னால் உன் அக்கா வாழ்க்கை கெட வேண்டுமா என்று கூறினர். அதனால் என் அக்கா திருமணம் முடியும் வரை உணர்ச்சிகளை கட்டுப் படுத்தி வைத்திருந்தேன். திருமணம் முடிந்து அக்கா நல்ல படியாக இருக்கிறாள் என்றவுடன் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கள் கிராமத்தினர் யாரும் பார்க்காத வகையில் சென்றேன்.

அப்படி நான் மன்னார் குடி வந்த போது திருநங்கையாக மாற மனதளவில் தயாராகினேன். என்னுடைய 21 வயசுல அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். சிகிச்சை முடிஞ்சு கண்ணைத் திறக்கும்போது புது மனிதனாக இந்த உலகத்துக்கு வந்ததாக நினைத்துக் கொண்டேன்.

அதுக்கிடையில் டிபன் கடை நடத்த ஆரம்பிச்சேன். என் கை மணம் நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. சமைக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கடையில் வருகிற வருமானத்தைச் சேமித்து வைக்க ஆரம்பிச்சேன். வெறித்தனமா உழைக்க ஆரம்பிச்சேன். என்னை மாதிரி வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கைகளை மகளாக ஏத்துக்கிட்டேன்.

நான் கெளரவமா செய்யுற தொழில் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. என் அம்மா, அப்பா என் கூட பட்டுக்கோட்டையில்தான் இருக்காங்க. டிபன் கடையில் வருகிற பணத்தில் எங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழுறேன் என்று கூறியுள்ளார்.

அதன் பின் என் வீட்டில் திருநங்கையாக மாறியதை போன் மூலம் கூறினேன். முதலில் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், என் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டனர்.