37 வயது நபர் என்னை சீரழித்து வீடியோவை கணவருக்கு அனுப்பிவிட்டார் : 60 வயது நடிகையின் புகாரால் பரபரப்பு!!

188

நடிகையின் புகாரால் பரபரப்பு

கேரள மாநிலத்தில் 60 வயதான தொலைக்காட்சி நடிகை ஒருவர் தன்னை 37 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழாவை சேர்ந்த 60 வயதான தொலைக்காட்சி நடிகை பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர், காயங்குளம் அளித்துள்ள புகாரில், 37 வயதான ஜியா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் எங்கள் இருவருக்குள்ளும் பழக்கம் அதிகமானது. அவர் எனக்கு ஸ்மார்ட்போன்று ஒன்று வாங்கிகொடுத்தார்.

பின்னர், கொச்சி உள்ள ஹொட்டல் மற்றும் எனது வீட்டில் வைத்து என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவுசெய்துகொண்டார்.

அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அதனை எனது கணவருக்கும் அனுப்பிவிட்டதால் எனது வாழ்க்கை சீரழிந்துவிட்டது, எனவே ஜியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். விசாரணையில், ஜியா துபாய்க்கு தப்பி சென்று விட்டது தெரியவந்துள்ளது. இதனால் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.