உயிருக்கு போராடிய கடைசி நிமிடம் : பெண்ணின் நகத்தில் புதுமாப்பிள்ளையின் ரத்தம் : இரட்டைக் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!!

225

திடுக்கிடும் தகவல்கள்

திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின் ரத்தத் துளிகள், தோல்தான் துப்புதுலங்க முக்கிய ஆதாரமாக இருந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8-ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த விஜியும் போத்திராஜும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகத்தில் ரத்தம், தோல் இருந்தன. அந்த ரத்தத்தை ஆய்வு செய்தபோது, அது பெண்ணின் ரத்தம் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் விஜியை கொலை செய்த நபரின் ரத்தமாக இருக்கலாம் என விசாரணை தொடரப்பட்டதில், விஜியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த வெங்கட் என்பர் மீது சந்தேகம் ஏற்பட்டு நடத்தப்பட்ட விசாரணையிலும் மேலும் அவரது ரத்தமாதிரியை சோதனை செய்து பார்த்ததிலும் அது வெங்கட்டின் ரத்தம் என உறுதிசெய்யப்பட்டது.

வெங்கட்டிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடிய விஜி, அவரது கழுத்தில் கீறிவைத்தபோது ரத்தங்கள் அவரது நகத்தில் படிந்துள்ளது.

வெங்கட்டுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணச் செலவுக்காக விஜியின் வீட்டுக்கு திருட சென்ற இடத்தில் இரட்டை கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வெங்கட் கொள்ளையடித்த நகை, பணம் ஆகியவற்றை மீட்பதில் திருத்தணி சரக காவல் உயரதிகாரி ஒருவர் பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.