தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்!!

1575

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் விகாரி வருடம் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் எந்த ராசிக்கு என்ன பலன் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என அனைத்து தகவல்களையும் விரிவாக பார்ப்போம் வாருங்கள். விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019.

மேஷம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

மேஷராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் விகாரி வருடத்தின் தொடக்கத்தில் சுமாரான பலன்களும், பிற்பகுதியில் நன்மையான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். விகாரி வருடத்தில் உங்களுக்கு பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுவீர்கள். சிறந்த பணலாபம் இருக்கும்.

வாக்குறுதிகளை கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்தி விடுவீர்கள். இதுவரை நீங்கள் தயங்கிய விடயங்களில் நீங்கள் விரும்பிய மாற்றங்கள் இருக்கும். பிறரின் உதவி உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். உதவி கேட்டு உதாசீனப்படுத்தியவர்கள் உங்களை தேடி வந்து உறவு கொண்டாடும் நிலை இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த சாதகமற்ற நிலைமைகள் அனைத்தும் இந்த வருடத்தில் சீராகும்.

எதிலும் நீடித்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும். இதுவரை தாமதப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உங்களுக்கு கிடைக்கும்.

சுயதொழில், வியாபாரம் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். உங்களின் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்களுக்கு தனலாபத்தையும், நற்பெயரையும் பெற்று தருவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். தேர்தல்களில் மகத்தான வெற்றியை பெறுவீர்கள்.

குடும்பத்தில் இது நாள் வரை தடைப்பட்டு கொண்டிருந்த சுப காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு வேலை, வெளிநாட்டு பயணங்களும் சிலருக்கு ஏற்படும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.

ரிஷபம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிய உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் தேவையற்ற பயணங்களால் உடல் மற்றும் மனம் களைப்படையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் நிறைவேறும். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

தொழில், வியாபாரங்களில் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். பொது மக்களின் ஆதரவை அவ்வளவு சுலபத்தில் பெற முடியாது.

ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தாராளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் மூலம் நற்பலன்களையும் லாபங்களை பெற்ற முடியும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளையும் லாபங்களை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.

கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

மிதுனம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலத்தில் சமமான பலன்கள் ஏற்படும். அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும்.

சிலர் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள். பண விவகாரங்களில் நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். அதிக பயணங்கள் செய்வதால் உடல் நலம் பாதிக்கும். அந்த பயணங்களால் உங்களுக்கு பெரிய அனுகூலங்கள் இருக்காது.

பிறர் செய்த தவறுகளுக்காக நீங்கள் அவப்பெயரை சம்பாதிக்க கூடிய நிலை உருவாகும். பணம் சம்பந்தமான விடயங்களில் பிறரை நம்புவதையும், பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மிகுந்த லாபங்கள் எதையும் நீங்கள் பெற முடியாது என்றாலும், நஷ்டம் ஏற்படாது.

ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சிலர் தெய்வீக காரியங்களில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையை பெறுவார்கள். தம்பதிகளிடையே அன்னோன்யம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். நெடுநாள் நோய்கள் தீரும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பெரிய மனிதர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

கலைஞர்கள் வெளியூர், வெளிநாடு பயணங்கள் சென்று பொருளும், புகழும் ஈட்டும் அமைப்பு உண்டாகும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில், பணியிடங்களில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் அவை சுமூகமாக தீர்ந்து விடும். தொழில், வியாபாரங்கள் விரிவு படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு அராசாங்கத்தின் உதவியும், ஆதரவும் உண்டாகும்.விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு விளைச்சல் நன்கு உண்டாகி பண லாபம் உண்டாகி விவசாய கடன்களை அடைப்பீர்கள். மாணவர்கள் கல்வி, விளையாட்டுகள் போன்றவற்றில் சிறந்து சாதனைகள் செய்வார்கள்.

கடகம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

மற்றவர்களின் எண்ணங்களை அறியும் திறன் கொண்ட கடக ராசிகாரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு தொட்டதெல்லாம் துலங்கும் பொன்னான ஆண்டாக இருக்க போகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நன்மையான பலன்கள் உங்களுக்கு அதிகம் ஏற்படும்.

உடல் நலம் சிறப்பாக இருக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். திருமணம் நடக்காமல் தாமதமானவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய நபர்களையே திருமணம் செய்து கொள்ளும் யோகம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

நீண்ட நாட்களாக வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும். உங்கள் பணிகளில் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.

ஆண்டின் பிற்பகுதியில் புதிய வீடு, மனை, வாகனங்கள் வாங்குவீர்கள். அரசு டெண்டர், கான்ட்ராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டும். அரசாங்கத்தின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கும் சகோதர உறவுகளுக்கும் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீரும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும்.

விலகி சென்ற உறவுகள், நண்பர்கள் உங்களை தேடி வந்து உறவு கொண்டாடுவர். தொலைதூர பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழில், வியாபாரங்களில் அதிகளவு வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் பெருத்த லாபத்தை அடைவீர்கள். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு அவர்களின் நிலத்தில் பயிர்வகைகள் நல்ல விளைச்சள் உண்டாகி மிகுந்த லாபத்தை அடைவார்கள். புதிய தொழில், வியாபாரங்களுக்கான முயற்சிகளில் சிறிது தடை ஏற்பட்டு நீங்கி, அக்காரியங்கள் வெற்றி பெறும்.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயன்களை சிலர் மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகாரமிக்க பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.

சிம்மம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

கம்பீர தன்மையும், நியாய உணர்வும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டில் முற்பகுதியில் சுமாரான பலன்களும், பிற்பகுதியில்அதிக நன்மைகளை தரும் ஆண்டாக இருக்க போகிறது.

ஆண்டின் முற்பகுதியில் குடும்பத்தில் சிறிது நிம்மதியற்ற சூழல் காணப்படும். ஒரு சிலருக்கு பொருளாதார ரீதியிலான கஷ்டங்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உங்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்குள் கருத்தொற்றுமை இருக்காது. ஒரு சிலருக்கு குழந்தைகள் வழியில் மனக்கவலைகள் உருவாகும்.

தொழில் வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடங்களில் தங்களின் பணிகளை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் வயிறு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்களை வசூலிப்பதில் சிலருக்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் எழும்.

ஆண்டின் பிற்பகுதியில் சிலருக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் பணியிலிருப்பவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் மீதிருக்கும் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் நீங்கி அனைத்திலும் மிக சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள்.

குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். கலைஞர்கள் தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க பெற்று மிகுந்த பொருள்வரவை பெறுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் காரணமாக லாபம் ஏற்படும். வாங்கிய பழைய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகளை செய்வார்கள். விரும்பிய உயர்படிப்புகளை படிக்கும் யோகம் பெறுவார்கள். நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளும், பணியிட மாறுதல்களும் கிடைக்கும். பெண்களுக்கு மிக சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். சிலர் புதிய மனை, வீடு போன்றவற்றை வாங்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும்.

கன்னி – தமிழ் புத்தாண்டு பலன்கள்

மிக சிறந்த அறிவாற்றல் உடைய கன்னி ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலத்தில் நன்மை தீமை கலந்த பலன்கள் அதிகம் உண்டாகும். ஆண்டின் முறைப்பகுதியில் சிலருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும், தாமதங்களும் உண்டாகும். எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றி பெறக்கூடிய நிலையிருக்கும். இந்த ராசியினருக்கு எல்லா விடயங்களிலும் கஷ்டங்கள் ஏற்படவே செய்யும். சிலருக்கு குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். ஒரு சிலருக்கு தொழில் நிமித்தமாக அடிக்கடி தொலைதூர பயணங்கள் செய்யும் நிலை உண்டாகும். எனினும் அப்பயணங்களால் பெரிய அனுகூலங்கள் இருக்காது. தொழில், வியாபாரங்களில் உங்கள் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவார்கள். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமான பலன்களையே கொண்டிருக்கும்.

ஆண்டின் பிற்பகுதியில் அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் விடயத்தில் பிரச்சனைகள் எழும் என்றாலும் சுமூகமாக தீரும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவி, ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஒரு சிலர் தாங்கள் வாங்கிய பழைய கடன்களை வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் நல்ல வேலை கிடைக்க பெறுவார்கள்.வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்.

விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும் என்றாலும், அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். கலைஞர்களுக்கு குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தீவிர முயற்சி செய்து கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள்.

துலாம் – தமிழ் புத்தாண்டு பலன்கள்

ராஜபோகங்களை அனுபவிக்க பிறந்த துலாம் ராசியினக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு நற்பலன்கள் அதிகம் நிறைந்த ஆண்டாக இருக்கும். இந்த விகாரி ஆண்டில் உங்கள் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் தனவரவு உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெறும். பெண்களுக்கு பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள் சேர்க்கை உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்கள், உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள்.

நீங்கள் கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். ஒரு சிலருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்கத்தில் நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில், வியாபாரம் மற்றும் விரிவாக்க முயற்சிகள் சிறப்பான வெற்றிகளை பெறும்.

ஆண்டின் பிற்பகுதியில் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்க பெறுவார்கள்.

சிலருக்கு புதிய ஆடைகள், வீடு, வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் தூர் வாருதல் போன்ற தெய்வீக காரியங்களில் ஈடுபடுவார்கள். உங்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலர் திடீர் வெளியூர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்களால் கௌரவிக்கப்படுவார்கள். உங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபங்களே இருக்கும். கலை தொழிலில் இருப்பவர்களுக்கு அராசங்கத்தின் உதவிகளும், விருதுகள் போன்றவை கிடைக்கும். மாணவர்கள் எப்பாடுபட்டாவது கல்வியில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவார்கள்.

விருச்சிகம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலம் நன்மை தீமை கலந்த ஆண்டாகவே இருக்கும்.

ஆண்டின் முற்பகுதியில் இந்த ராசியினருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படும். மனசஞ்சலங்கள் அதிகம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை, கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகள் பிரிந்து வாழக்கூடிய நிலை சிலருக்கு ஏற்படும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டு, பொருள் விரயமும் சிலருக்கு உண்டாகும். சிலருக்கு தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும். சக போட்டியாளர்களின் வியாபார போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும்.எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் சிலருக்கு கிடைக்காது. பணியில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் நெருக்கடி ஏற்படும். தொழில், வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்களும், அலைச்சல்களும் உண்டாகும்.

ஆண்டின் பிற்பகுதியில் இது வரை உங்களுக்கு இருந்து வந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் சிலருக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகைகள் யாவும் உங்களுக்கு வந்து சேரும்.

தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்களால் மிகுந்த லாபங்கள் ஏற்படும். உங்களின் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.

கலை தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு அரசின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் மந்த நிலை நீங்கி கல்வியில் மிளிர்வார்கள்.

தனுசு – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

பல விடயங்களை கற்று தேர்ந்து பண்டிதர்களாக இருக்கும் தனுசு ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு சமமான பலன்கள் நிறைந்த ஆண்டாகவே இருக்கும்.

இந்த விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல் ஆரோக்கியம் சற்று பாதிப்பிற்குள்ளாகும். குடும்பத்தின் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருமானத்திற்கு குறைவு ஏற்படாது. தேவையற்ற அலைச்சல்களால் பொருள் விரயம், நேர விரயம் ஏற்படும்.

கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழல் சிலருக்கு உண்டாகும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும்.

அசையா சொத்துக்களால் சிறிது பொருள் விரயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிறிது தடை, தாமதங்களுக்கு பிறகே வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

விகாரி ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த நேரடி மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் ஏற்படும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும்.

தொழில்,வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெற்று அதிக லாபம் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள் பொது மக்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுவதால் நற்பெயரை ஈட்ட முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். வேலை கிடைக்காதவர்கள், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். விவசாய தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் ஏற்படும்.

விவசாயத்திற்கான அரசு மானியங்களும் கிடைக்கும் கலை தொழில் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடுகள் சென்று பொருள் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சியுடன் ஈடுபட்டு கல்வியில் வெற்றி பெறுவார்கள்.

மகரம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

எதிலும் வேகமாக செயல்படும் மகர ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு நன்மைகள் அதிகம் ஏற்படுத்தும் ஒரு காலமாக இருக்கும். விகாரி ஆண்டின் முற்பகுதியில் இந்த ராசியினரின் உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் நீங்கும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நிலை மாறி அதிக பொருள் வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஒரு சிலர் ஆடம்பர செலவுகளையும் மேற்கொள்வீர்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்.

உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை சிறிது அலைச்சல்களுக்கு பிறகு கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் உங்களை தேடிவந்து சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும்.

ஆண்டின் பிற்பகுதியில் குடும்பத்தினர் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். உங்கள் நண்பர்களால் பொருள்வரவு ஏற்படும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். உங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளும் தக்க சமயத்தில் கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் தங்களின் திறமையான செயல்பாடுகளால் எதிரணியை திணறடிப்பார்கள். தேர்தல்களில் வெற்றி கிடைக்கும். பதவிகளும் சிலருக்கு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு ஏற்படாது. மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

கும்பம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

எங்கும், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்ப ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்க போகிறது. விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல் மற்றும் மனம் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

மனதில் இருந்து வந்த குழப்பங்களும், வீண் கவலைகளும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி அன்பும், அன்னோன்யமும் பெருகும். சிலருக்கு குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலர் குடும்பத்தோடு திடீர் உல்லாச பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

பணவரவுகளில் சிறிது தாமதம் ஏற்படும் என்றாலும் முழுமையான தொகை உங்களுக்கு வந்து சேரும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களுக்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெறுவார்கள்

விகாரி ஆண்டின் பிற்பகுதியில் வயிறு சம்பந்தமான ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு நீங்கும். சிலர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிதாக தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் கடின முயற்சிகள் செய்து வெற்றியை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். சமுதாயத்தின் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அதன் மூலம் பல ஆதாயங்கள் உங்களுக்கு ஏற்படும். உறவினர்களால் தன லாபம் உண்டாகும். பொருள் வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். சக ஊழியர்களின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். கலைத்தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். மாணவர்கள் மந்த நிலை நீங்கி கல்வியை ஆர்வத்துடன் கற்று தேர்ந்து சாதனைகள் செய்வார்கள்.

மீனம் – தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

பிறர் நலனில் அதிக அக்கறை காட்டும் மீன ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு பல விதமான நன்மைகளை தரும் ஒன்று ஆண்டாக இருக்க போகிறது. விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல்நலத்தில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் ஒன்றிணைவர்கள். உறவினர்களுடன் நிலவி வந்த பகைமை தீரும். சிலர் ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். தனிப்பட்ட தேவைகள் மற்றும் தொழிலுக்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி தருவீர்கள்.

தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது. கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்க டெண்டர், கான்ட்ராக்ட் போன்றவை கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெற்று நல்ல முறையில் திருமணம் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வும் ஊதிய உயர்வுகளையும் பெறுவீர்கள்.

விகாரி ஆண்டின் பிற்பகுதியில் நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும் நிலை உண்டாகும். புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.

உங்கள் பூர்வீக சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அவை உங்களை வந்தடையும். வெளிநாட்டு பயணங்களால் நல்ல ஆதாயம் இருக்கும். தொழில் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் சிறிது தடை, தாமதங்களுக்கு பிறகு பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.

விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். கல்வி, கலைகளில் மாணவர்கள் முதலில் சற்று பின் தங்கினாலும் பின்பு கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் சிறப்பாக கணிக்கப்ட்டுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு 2019 பலன்கள் முழுவதும் தெள்ள தெளிவான முறையில் மிகவும் எளிமையாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் சிறந்த முறையில் 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டு அனைத்து ராசி நண்பர்களுக்கும் சிறப்பாக இருக்க எங்களது வாழ்த்துக்கள்.