தங்க சேலை, வைர ஜாக்கெட்…அம்பானி மருமகளுக்கு தயாராகும் ஆடை: விலை எவ்வளவு தெரியுமா?

680

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறவிருக்கிறது.

ஆகாஷ் அம்பானி, தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இந்நிலையில், அம்பானியின் மருமகளுக்கு திருமணப்புடவை சென்னையில் தயார் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

தங்கம் மற்றும் நவரத்தினங்களால் வடிவமைக்கப்பட்ட காஞ்சிபரம் சேலை தயார் செய்யப்படுகிறது. இதன் எடை 8 கிலோ. அதுமட்டுமின்றி சேலையின் ஜாக்கெட் மட்டும் தனியாக வைரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் விலை 50 லட்சம் ரூபாய் ஆகும்.