யார் இந்த பிரபல ஹீரோயின் என்று தெரிகிறதா? அதிரடி மாற்றம் இதற்கு தானாம்!!

1310

பிரபல ஹீரோயின்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வருகின்றது. நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, வரலட்சுமியை தொடர்ந்து தற்போது இனியாவும் ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் களம் இறங்கியுள்ளார்.

இவர் வாகை சூடாவா படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தமிழில் ‘ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன்.

அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன், என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம்.

நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும், தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும், ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது’ என அவர் கூறியுள்ளார்.