வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் : அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

202

பதறவைக்கும் சம்பவம்

இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவருக்கும் பல்கர் (21) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்னர் பல்கர், சோலாங்கி என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் அவருடனான தொடர்பை துண்டித்தார்.

ஆனால் சோலாங்கியால் பல்கரை மறக்க முடியவில்லை, இதன் காரணமாக தன்னுடன் தொடர்ந்து பழக வேண்டும் என பல்கரை சோலங்கி வற்புறுத்தி வந்தார். ஆனால் இதற்கு பல்கர் சம்மதிக்காத நிலையில் அவர் மீது சோலாங்கி ஆத்திரம் கொண்டார்.

இந்நிலையில் தன்னை சோலாங்கி மிரட்டுவதாகவும், அவர் தன்னை கொன்றுவிடுவார் என பயப்படுவதாகவும் தனது கணவர் மகேந்திராவிடம் பல்கர் கூறினார்.

இது தொடர்பாக புகார் அளிக்க பல்கரும், மகேந்திராவும் காவல் நிலையம் சென்றனர். அப்போது வழியில் மகேந்திராவின் நண்பர் அவசர உதவி தனக்கு வேண்டும் என கூறி அவரை உடன் அழைத்து சென்றார்.

இதையடுத்து அடுத்துநாள் காவல் நிலையத்துக்கு செல்லலாம் என பல்கர் முடிவெடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பல்கர் தனது தாய் ஜெயஸ்ரீ உடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அதிகாலை 3.30 மணியளவில் பல்கரின் முன்னாள் காதலன் சோலாங்கி அவர் வீட்டுக்கு வந்த நிலையில் முதலில் இரும்பு கம்பியால் ஜெயஸ்ரீயை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் பல்கரை கழுத்தை கூரான கத்தியால் அறுத்து கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். தாய், மகள் இறப்பதற்கு முன்னர் வலியால் அலறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரின் உயிரும் பிரிந்திருந்தது.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்து இரு சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிசார் கூறுகையில், கொலையாளி சோலாங்கி மீது ஏற்கனவே கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது, இதற்காக அவர் முன்னர் சிறையில் இருந்தார் என கூறியுள்ளனர்.