காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

333

அதிர்ச்சித் தகவல்கள்

கர்நாடக மாநிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுவின் சடலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நவோதே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மது என்கிற மாணவி கடந்த 13ம் திகதி முதல் மாயமாகியிருக்கிறார்.

16ம் திகதி கல்லூரியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இவரது உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பொலிஸார் தற்கொலை என வழக்கினை முடிக்க நினைத்தனர் . ஆனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மது பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டாயத்தின் பேரில் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இணையதளவாசிகள் இணைந்து, மதுவிற்கு நீதி கேட்கும் ஒரு ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.