நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த 2 குழந்தைகள் : அலறியடித்து ஓடிய சகோதரி!!

227

அலறியடித்து ஓடிய சகோதரி

ஐதராபாத் மாநிலத்தில் வீட்டிலிருந்து மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த தேவராயா குமார் (38) என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற தன்னுடைய காதல் மனைவி சிரிஷாவை அழைத்து வர சென்றிருக்கிறார்.

ஆனால் அவருடைய மனைவி வீடு திரும்ப மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், மனைவியுடன் சண்டை போட்டதுடன், உன்னுடைய குழந்தைகளை அனுப்பி வைக்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு, அதிகமான மது போதையில் குமார் வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயம் அவருடைய மூன்று குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

1 மணியளவில் அவருடைய 6 வயது மகன் அகிலை தனியாக அறைக்கு எடுத்துச்சென்று தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் அவனை இறக்கி தரையில் கிடத்தும்பொழுது, லேசாக அசைந்திருக்கிறான்.

இதனை பார்த்த குமார், உடனே ஒரு கத்தியை எடுத்து மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான். பின்னர் தன்னுடைய 4 வயதான மகள் சரண்யாவை கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு, சிறிது நேரம் புகைபிடித்துக்கொண்டிருந்துள்ளான்.

இதற்கிடையில் விழித்தெழுந்த 10 வயதான மகள் மல்லேஸ்வரி, ரத்தவெள்ளத்தில் சகோதரனும் சகோதரியும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை கவனித்த குமார், மல்லேஸ்வரியையும் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அவரிடம் சண்டையிட்ட மல்லேஸ்வரி லேசான ரத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்துக்கு வீட்டு நபர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இரண்டு குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.