உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதி!!

830

உலகிலேயே முதல்முறையாக மாலத்தீவில் கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள 2 மாடி நட்சத்திர விடுதியை வரும் நவம்பர் மாதம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.அங்குள்ள ரங்காலி (Rangali) என்ற தீவில், கடல்மட்டத்திலிருந்து 16 புள்ளி 4 அடி ஆழத்தில் இந்த விடுதி அமைக்கப் பட்டுள்ளது.

இந்த 2 மாடி சொகுசு விடுதியை நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. இந்த விடுதியின் சிறப்பாக மேல்தளம் மட்டும் கடல்நீருக்கு மேலே தெரியும் வகையில் நேர்த்தியாக நிர்மானிக்கப்பட்டுள்ளது.கடலுக்கடியில் படுக்கையறை கடல் மட்டத்திற்கு 5 மீட்டர் கீழே படுக்கை அறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய அறைகளும் இந்த நட்சத்திர விடுதியில் அமைந்துள்ளது.

கண்ணாடித் தொட்டி போலவே உள்ள இந்த அறைகளுக்குள்ளே இருந்து கொண்டு, கடல்நீரில் உலவும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.இந்த சொகுசு விடுதியில் ஒரு நாள் தங்கியிருக்க இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.