ஐரோப்பாவின் விலையுயர்ந்த ஹொட்டல் எது தெரியுமா?

605

ஐரோப்பாவின் மிக விலையுயர்ந்த ஹொட்டல் ஜெனிவாவில் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.The Hotel President Wilson’s Royal Penthouse Suite என்னும் குறித்த ஹொட்டல் தான் ஐரோப்பாவின் விலையுயர்ந்த ஹொட்டல் ஆகும்.

இங்கு ஒரு இரவு தங்க $83,500 வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த விலை பட்டியல் ஹொட்டலின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளிடப்படாத நிலையில் CNN செய்தி நிறுவனம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனால் ஜெனிவா ஹொட்டல்களில் தங்க இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமா என பயப்பட வேண்டாம். இந்த ஒரு ஹொட்டலில் தான் இந்தளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கடந்தாண்டு கணக்குப்படி ஜெனிவா ஹொட்டல்களில் ஒரு நாள் இரவு தங்க சராசரியாக €242.90 வசூலிக்கப்படுகிறது.

இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் பாரீஸில் உள்ள ஹொட்டல்கள் இடம்பிடித்துள்ளன.இங்குள்ள ஹொட்டல்களில் €231.30 வசூலிக்கப்படுகிறது.மூன்றாமிடத்தில் ஜூரிச்சில் உள்ள ஹொட்டல்கள் €203.90 கட்டணமும், நான்காமிடத்தில் லண்டனில் உள்ள ஹொட்டல்கள் €169.20-கட்டணமும் வசூல் செய்கின்றன.இந்த விலைபட்டியலில் அடுத்தாண்டு சில சதவீத மாற்றங்கள் நிகழும் என தெரியவந்துள்ளது.