கொழுந்துவிட்டெரிந்த விமானம்… நூலிழையில் தப்பிய பயணிகள் : வழிப்போக்கரின் துணிச்சல்!!

146

கொழுந்துவிட்டெரிந்த விமானம்

பிரித்தானியாவில் ஓல்ட் டிராஃபோர்ட் பகுதிக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று விபத்தில் சிக்கி கொழுந்துவிட்டெரிந்த நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் மூவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

தென் வேல்ஸ் பகுதியில் இருந்து சகோதரர்கள் இருவர் தங்களது உறவினரின் குட்டி விமானத்தில் ஓல்ட் டிராஃபோர்ட் பகுதிக்கு கால்பந்து விளையாட்டை காண புறப்பட்டு சென்றுள்ளனர்.

கார்டிஃப் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதும் விளையாட்டை காண புறப்பட்டு சென்ற அந்த விமானமானது மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மட்டுமின்றி உடனையே அந்த விமானமானது தீ பற்றியது. மேலும், அவசர அவசரமாக சாலை நடுவே தரையிறங்க முயற்சி மேற்கொள்கையில் விமானம் வெடித்து கொழுந்துவிட்டெரியத் துவங்கியுள்ளது.

அந்த விமானத்தில் 19 வயதான ஜாக் மூர் மற்றும் அவரது சகோதரி 16 வயதான பில்லி மான்லேயும் தங்களது உறவினரும் விமானியுமான ஸ்டுவர்ட் மூர் உடன் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விமானம் சாலையில் விழுந்து தீபிடித்து எரியத்துவங்கியதும், அந்த வழியாக சென்ற பலர் உடனடியாக உதவிக்கு விரைந்துள்ளனர். ஜோயல் மற்றும் டானியேல் ஆகிய இருவரும் அந்த விமானத்தில் சிக்கியிருந்த பயணிகள் மூவரையும் தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.

அந்த இருவரும் இல்லை என்றால் தற்போது தாங்கள் மூவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டோம் என ஜாக் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக காயம் பட்ட மூவருக்கும் சிகிச்சை அளித்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானமானது மொத்தமும் எரிந்து சாம்பலானது.