கொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த குடும்பம் : அதிர்ச்சிக் காரணம்!!

197

பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த குடும்பம்

பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபிய குடும்பம் ஒன்று கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டிவைத்து தண்டனை அளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள பணக்கார குடும்பம் ஒன்றில் கடந்த பல மாதங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார் 26 வயதான அகோஸ்டா பரூலோ.

சம்பவத்தன்று விலை உயர்ந்த மரச்சாமான்களை அவர் கொளுத்தும் வெயிலில் விட்டுவிட்டு வேறு பணிகளில் மும்முரமாகியுள்ளார். இது அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அகோஸ்டாவை கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டிவைத்து தண்டனை அளித்துள்ளனர்.

இதை அவருடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டவர் புகைப்படமாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சகம் தலையிட்டு, அவரை உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவர் பிலிப்பைன்ஸ் திருபியதாகவும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 2.3 மில்லியன் பிலிப்பைன்ஸ் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சரிபாதி பெண்கள் என கூறப்படுகிறது