தங்கையை கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த முதல் மனைவி… அதன் பின் நடந்த விபரீதம்!!

372

நடந்த விபரீதம்

தங்கையை இரண்டாம் திருமணம் செய்த கணவர், அவரிடம் அதிகம் பாசம் காட்டியதால், மிகுந்த வேதனையடைந்த அக்கா, தங்கை என்று கூட பாராமல் அவரை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர், அங்கிருக்கும் இறைச்சிக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்த சுராகாத்தூண் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிகளுக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளன. சுராகாத்தூணுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதால், குழந்தைகளையும் கணவரையும் அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை.

இதற்கிடையியில் சுராகாத்தூணின் உறவினர் தங்கை முறையான ஜெரினா பேகத்துக்கு உறவினர்கள் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது போன்று வங்கதேசத்தில் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பதால், ஜெரினா பேகத்தை சுராகாத்தூண், தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.