பிரித்தானியாவில் வலி நிவாரணியால் ஓரினச் சேர்க்கையாளராக மாறிய நபர்!

584

பிரித்தானியாவில் நபர் ஒருவர், தொடர்ச்சியாக வலி நிவராணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால் ஓரினச் சேர்க்கையாளராக மாறிய சம்பவம் நடந்துள்ளது.பிரித்தானியாவைச் சேர்ந்தவர் ஸ்கார்ட் பர்டி(23). இவர் 6 மாதங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதனால் இவரின் பாதம் பாதிக்கப்பட்டது.

அதனால் உண்டான வலியைக் குறைக்க மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர்கள் வலி நிவாரணியை பரிந்துரைத்தனர். வலியும் தொடர்ச்சியாக இருந்ததால், ஸ்கார்ட் வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவரின் காதலி மீது இருந்த காதல் குறையத் தொடங்கியுள்ளது. அடிக்கடி அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் அவரது காதலி பிரிந்து சென்றுள்ளார்.ஆனால், ஸ்கார்ட்டிற்கு அதனால் வருத்தமோ, மனவலியோ ஏற்படவில்லை. மாறாக பிற ஆண்கள் மீது அவருக்கு விருப்பம் அளவுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் நிலை குறித்து அவர் சிந்தித்துள்ளார். அப்போது தான் அவருக்கு தெரிந்துள்ளது தனது இந்த நிலைக்கு காரணம் வலி நிவாரண மாத்திரை தான் என்று. ஏனெனில், ஸ்கார்ட் வலி நிவாரணியைத் தவிர வேறு எதையும் புதிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இது தொடர்பாக ஸ்கார்ட் கூறுகையில், ‘நான் ஓரினச் சேர்க்கையாளராக மாறியதற்குக் காரணம், இந்த வலி நிவாரணிதான் என்ற முடிவுக்கு வந்தேன். என் காதலியை நேரில் சந்தித்து, இனி எப்போதும் உன்னை ஏற்றுக் கொள்ளவே இயலாது என்றும், என்னை தவறாக நினைக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டேன்.

முதலில் நம்ப மறுத்தவர், பிறகு நான் நேர்மையாக ஒப்புக்கொண்டேன் என்று பாராட்டினார். இந்த வலி நிவாரணி மீது நான் குற்றம் சுமத்தினாலும், இப்படி என் விருப்பம் மாற்றம் அடைந்ததில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.ஆனால், ஸ்கார்ட் பர்டியின் இந்தக் குற்றச்சாட்டை மருந்து நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது