இரவு சரியா தூக்கம் வரலயா? இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்!!

754

தற்போதைய காலக்கட்டத்தில் வேலைப்பளுமிக்க அலுவலக பணியால் பலரும் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து அவஸ்தைப்படுகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதில் இதற்கு தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:பிங்க் நிற இமாலய கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்,நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்,தேன் – 5 டேபிள் ஸ்பூன்தயாரிக்கும் முறை:ஒரு பாட்டிலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு குலுக்க வேண்டும். இப்படி குலுக்குவதால் அந்த அனைத்து பொருட்களும் ஒன்று சேர்ந்து ஒரு மருத்துவ கலவை கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை:இந்த கலவையை இரவில் படுக்கும் முன் அல்லது நடுராத்திரியில் எழும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் கலவையை எடுத்து நாக்கிற்கு அடியில் வையுங்கள்.அந்த கலவையை கரைவதற்குள், நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றுவிடுவீர்கள்.

இந்த இமாலய கல் உப்பினால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகள்:இமாலய கல் உப்பில் உள்ள அதிகளவிலான சோடியம் தாழ் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உணவில் சாதாரண உப்பிற்கு பதிலாக, இமாலய கல் உப்பைப் பயன்படுத்தினால், தாழ் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இமாலய கல் உப்பில் உள்ள சத்துக்கள், செரிமான பாதையில் செல்லும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும். இதன் விளைவாக உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகும்.

இமாலய கல் உப்பில் உள்ள பல்வேறு கனிமச்சத்துக்கள், எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு, இணைப்புத்திசுக்களையும் வலிமையாக்கும். இதனால் ஆர்த்ரிடிஸ், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.