சிகிச்சையின் போது வாயிலிருந்து வெடித்த மர்மப்பொருள் : மருத்துவமனையில் பெண்ணுக்கு நடந்த சோகம்!!

318

வெடித்த மர்மப்பொருள்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் விஷம் குடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போது, அவருடைய வாயிலிருந்து வெடித்த மர்ம பொருளால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷீலா தேவி (40) என்கிற பெண், வீட்டில் சுயநினைவின்றி கிடந்ததாக அவருடைய கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவருடைய வயிற்றிலிருந்து விஷத்தை எடுப்பதற்கான சிகிச்சையை அளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு மர்ம பொருள், ஷீலாவின் வாயிலிருந்து வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதில் அந்த அறை முழுவதுமாகவே புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென தெரியாமல் மருத்துவர்கள் திகைத்து போயுள்ளனர். ஷீலா தேவியின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவ வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. நாங்கள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். எந்த காரணத்தால் இது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.

அந்த பெண் எடுத்துக்கொண்ட விஷம், இரைப்பை அமிலத்துடன் கலந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.