பிரித்தானிய குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியானது!!

443

பிரித்தானியாவில் இன்று காலை பிறந்த குட்டி இளவரசரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.தலைநகர் லண்டனில் உள்ள St Mary’s மருத்துவமனையில் இளவரசி கேட் மிடில்டனுக்கு இன்று காலை 11 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக கென்சிங்டன் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தியில் தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

முன்னதாக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இளவரசர் வில்லியம், தாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் அதே அளவு கவலையும் தொற்றிக் கொண்டுள்ளது என குறும்பாக தெரிவித்திருந்தார்.

பிறந்த குட்டி இளவரசர் 3.8 கிலோ எடை இருப்பதாகவும், சராசரியாக பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளின் எடை 3.5 கிலோ எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் குட்டி இளவரசர் Prince of Cambridge என அறியப்படுவார் என தெரிய வந்துள்ளது.