17 வயது சிறுமியுடன் ரகசிய வாழ்க்கை.. மனைவி உட்பட மொத்த குடும்பத்தையும் கொலை செய்த நபர்.. வெளியான பின்னணி!!

625

சிறுமியுடன் ரகசிய வாழ்க்கை

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 44 வயதான நபர் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் உயிரிழந்த நிலையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அவர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

பெர்ணாண்டோ மன்ரீக் (44) என்பவர் தனது மனைவி மரியா (43) மற்றும் எலிசா (11), மார்டின் (10) ஆகிய இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நால்வரும் கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் தங்கள் வீட்டில் சடலமாக கிடந்தனர்.

இதோடு அவர்கள் வீட்டில் உள்ள நாய்க்குட்டியும் இறந்து கிடந்தது. விசாரணையில் மன்ரீக், கார்பன் மோனாக்சைட் என்ற வாயுவை வீட்டில் வைத்து அனைவரையும் கொன்று தானும் இறந்தது தெரியவந்தது.

கடந்த 2013ல் இருந்தே மன்ரீகுக்கும் அவர் மனைவி மரியாவுக்கு குடும்ப விடயம் தொடர்பாக பிரச்சனை இருந்தது. மன்ரீக் பல இடங்களில் கடன் வாங்கிய நிலையில் அவர்கள் நிதி பிரச்சனையால் தவித்து வந்தனர். இதோடு மன்ரீகுக்கு 17 வயது சிறுமியோடு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

அதாவது பணி விடயமாக வெளிநாடுகளுக்கு மன்ரீக் அடிக்கடி செல்வார், அப்படி பிலிப்பைன்ஸுக்கு சென்ற போது 17 வயது சிறுமியுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு அவருடன் ரகசிய வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு அதிகளவு பண உதவியும் செய்து வந்துள்ளார்.

இதையெல்லாம் தெரிந்து கொண்ட அவர் மனைவி மரியா இனி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது, நமது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என மன்ரீக்கிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு கோபமடைந்த மன்ரீக் குடும்பத்தை கொன்றுவிட்டு தனது உயிரையும் விட முடிவு செய்துள்ளார். மன்ரீக்கும், மரியாவும் கொலம்பியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இளம் வயதில் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.