வெளிநாட்டில் இருந்து வந்த காதலன் : அவரை மணக்க திருமண கோலத்தில் ஆசையாக சென்ற காதலி… பின்னர் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

801

வெளிநாட்டில் இருந்து வந்த காதலன்..

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் 6 ஆண்டுகளாக கமலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் வேலை கிடைத்த நிலையில் அங்கு செந்தில்குமார் சென்றுவிட்டார். வெளிநாடு கிளம்பும் முன்னர் கமலா பெற்றோரிடம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கமலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு செந்தில்குமார் சென்றார்.

இதனிடையில் சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு செந்தில்குமார் திரும்பினார். பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதை அறியாத கமலா நேற்று செந்தில்குமாரை மணமுடிக்க திருமண ஆசையுடன் மாலைகளுடன் வந்த போது தன்னை செந்தில்குமார் ஏமாற்றியதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுதாரித்து கொண்ட கமலா துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட செந்தில்குமார் காவல் நிலையத்திலேயே அந்தப் பெண்னை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த பிறகு, செந்தில் குமாரின் தாய் பிரச்னை கிளப்பியதால் திருமணம் தற்போது நின்றுபோனது. திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய புகாரில், செந்தில் குமாரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்