புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலுக்குள் விழுந்த விமானம் : உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பலி!!

309

கடலுக்குள் விழுந்த விமானம்

Honduras நாட்டில் கடலுக்குள் விமானம் விழுந்த நிலையில் உள்ளே இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Honduras தலைநகர் Tegucigalpaவில் இருந்து Trujillo நகர் நோக்கி ஒரு சிறிய விமானம் நேற்று கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்த நிலையில் நேராக Honduras தீவில் உள்ள கடலுக்குள் விழுந்தது.

இதில் விமானத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர், இன்னொருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பின்னர் அவரும் உயிரிழந்தார்.

பிரட்லி போஸ்ட், பெய்லி சோனி, டோனி டுப்லர், விமானி பேட்ரிக் போர்செத் மற்றும் ஆண்டனி டுப்லர் ஆகியோர் தான் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் கனடியர்கள் என்பதும் சுற்றுலாவுக்காக அவர்கள் Honduras வந்ததும் தெரியவந்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.