செயற்கை சுவாச கருவி அகற்றம்! 9 மணிநேரமாக உயிருக்கு போராடும் குழந்தை!!

576

பிரித்தானியாவின் லிவர்பூலைச் சேர்ந்த டாம் ஈவன்ஸுக்கும் கேட் ஜேம்ஸுக்கும் பிறந்த குழந்தை ஆல்ஃபீ இவான்ஸ்.பிறக்கும்போது ஆரோக்கியமான குழந்தையாக இருந்தாலும் போகப்போக அவனது உடல் முதல் ஏழு மாதங்களில் அடைய வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை தவறவிட்டது.

குழந்தைக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அடிக்கடி வலிப்பு வரத் தொடங்கியது.இதனால் அவனது பெற்றோர் அவனை லிவர்பூலில் உள்ள ஆல்டர் ஹே சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.குழந்தை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் மருத்துவமனையிலேயே இருந்து வருகிறான்.

மருத்துவமனையில் குழந்தைக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன.குழந்தைக்கு அதிக வலிப்பு ஏற்படவே அவன் கிட்டத்தட்ட ஒரு ஜடம் மாதிரி, எனவே செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எவ்வளவோ கெஞ்சியும் பெற்றோர்களின் வேண்டுதலுக்கு செவி கொடுக்காமல் ஆல்ஃபீக்கு வந்திருப்பது ஒரு அரிய வகை நோய் என்றும், அவனது செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட அவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

கீழ் நீதிமன்றங்கள் மருத்துவமனைக்கு சாதகமாக தீர்ப்பளிக்க உச்ச நீடிமன்றத்தை நாடினர் பெற்றோர்கள்.அங்கும் அவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, பதிலாக அவமானமும் எச்சரிப்புமே கிடைத்தது.இந்நிலையில் போப் ஆண்டவர் குழந்தைக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார், குழந்தைக்காக தொடர்ந்து வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வளவு நடந்தும் சற்றும் மனமிரங்காத மருத்துவமனை நேற்று இரவு 9.17 மணியளவில் செயற்கை சுவாசக்கருவிகளை அகற்றி விட்டது.ஆனால் குழந்தை இறந்து போகும் என மருத்துவமனை எதிர்பார்த்த நிலையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக அதிசயவண்ணமாக ஆல்ஃபீ தானாகவே சுவாசித்து வருகிறான்.எனவே தனது மகனுக்கு உதவுமாறு ஆல்ஃபீயின் பெற்றோர்கள் மீண்டும் மருத்துவமனையைக் கோரியுள்ளனர்.